காரைக்கால்: காரைக்கால் தருமபுரம் தக்களூர் பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கியது.
காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள தருமபுரம் தக்களூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.நேற்று திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக புனித செபஸ்தியார் ஆலய பங்குகுரு தலைமையில் கொடிக்கு சிறப்பு ஆசீர்வதிக்கப்பட்டு பின் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக சென்று பின் ஆலயத்தை வந்தடைந்தது.பின் கொடியேற்றப்பட்டது.திருப்பலி தொடங்கியது.வரும் 29ம் தேதி மூன்று பெரிய தேர்பவனி,வரும் 30ம் தேதி ஐந்து பெரிய தேர்பவனி நடைபெறுகிறது.இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.