பணத்தை தேடி பலர் ஓடுவர். நல்ல மனிதர்களை தேடி சிலர் ஓடுவர். இவர்களின் தேடலுக்கு காரணம் ஒருவித ஆசையே. இப்படி எந்த ஆசையும் இல்லாமல் மனஅமைதிக்காவே சிலர் ஆலயத்திற்கு செல்வதுண்டு. அப்படி சென்றவர்தான் அமெரிக்காவை சேர்ந்த எழுத்தாளர் புக்கர் டி.வாஷிங்டன். இவர் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் வீட்டில் அருகில் உள்ள ஆலயத்தில் அனுமதிக்கவில்லை. வருத்தப்பட்ட இவர், ‘நான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆண்டவர் சொல்வார்’ என்று அங்கிருந்தோரிடம் கூறிவிட்டு சென்றார். காலம் உருண்டு ஓடியது. இவர் எழுதிய புத்தகங்கள் பிரபலமானது. ஒருநாள் அதே ஆலயத்திற்கு சென்றார். ‘‘என்ன.. ஆண்டவர் ஏதாவது உன்னிடம் சொன்னாரா..’’ என்று கிண்டலாக கேட்டனர் அங்குள்ளவர்கள். அதற்கு எழுத்தாளர், ‘‘நானே இல்லாத இடத்திற்கு நீ ஏன் வருகிறாய் என ஆண்டவர் கேட்டார்’’ என சொன்னார். அன்பு உள்ள இடத்தில்தான் ஆண்டவர் இருப்பார்.