திறந்த மனம் என்றாலும்கூட அதில் யாருக்கும் திறந்து காட்டப்படாத பல பக்கங்கள் இருக்கும். முற்றுப்புள்ளியைக்கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சியாகிவிடும். பணம் சம்பாதிக்க நல்லவர், கெட்டவர் எல்லோராலும் முடியும். மனிதர்களைச் சம்பாதிக்க நல்ல மனமுள்ள மனிதனால் மட்டுமே முடியும். எதிலும் குறைகளைக் காண்பவர்களுக்கு ரசிக்கத்தெரியாது. எதையும் ரசிப்பவருக்கு குறைகளே தெரியாது. மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும். வாழ்க்கையை ரசியுங்கள். இன்பத்தை ருசியுங்கள்.