மதுரை, திருச்சி, கோவையில்.. மீண்டும் சீனிவாச கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2022 09:04
திருலை திருப்பதியில் நடைபெறும் சீனிவாச கல்யாணம் பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க சென்னை தீவுத்திடலில் சில தினங்களுக்கு முன் நடந்தது வந்திருந்த பக்தர்கள் அனைவக்கும் திருப்பதி லட்டு,ஆப்பிள்,மோர்,குடிநீர் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.பெரிய திரைகளில் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் காட்டப்பட்டது என்று எல்லாமே சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தது.
வேளுக்குடியார் தனது கணீர் குரலில் திருக்கல்யாய வைபவம் என்பது எதற்காக என்பதை அழகுற விளக்கினார்.திருமலை திருப்பதி கோவில் போல அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையின் நடுநாயகமாக மூலவர் போல சீனிவாசப்பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு முன்னாக உற்சவரான சீனிவாசப்பெருமாளும் சற்றுத்தள்ளி சீதேவி,பூதேவி ஆகிய இருவரும் வீற்றிருந்தனர்.அக்னி மூட்டி ஒவ்வொரு சடங்காக நடத்தப்பட்டு பின்னர் மணமகன் சார்பாக மணமகள்களுக்கு மாங்கல்யம்அணிவிக்கப்பட்டது. பின்னர் மணமக்கள் ஒன்றாக ஒரே மேடையில் எழுந்தருளினர் அது மட்டுமின்றி பக்தர்கள் இருக்குமிடம் தேடிவந்து அருள்பாலித்தனர். இந்த இனிய நிகழ்வு எல்லா ஊரிலும் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் அடுத்து மதுரை, திருச்சி, கோவை போன்ற ஊர்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற மகிழ்வான தகவல் வந்துள்ளது.