பாதாள காளியம்மன் கோயிலில் வளையல் அணிவிப்பு உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2022 05:04
கடலாடி: கடலாடியில் பழமை வாய்ந்த பாதாள காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த ஏப்.26 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:30 மணியளவில் பாதாள காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு செவ்வரளி மலர் சூட்டப்பட்டது. அம்மனுக்கு மாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு வளையல் காப்பு பூட்டப்பட்டது. மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. வருகிற மே.4 ஆம் தேதி வரை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.