பதிவு செய்த நாள்
30
ஏப்
2022
05:04
வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிேஷகத்தையொட்டி, யாகசாலை அமைக்கும் பணி நடக்கிறது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், மகா கும்பாபிேஷக விழா, மே 8ம் தேதி நடக்கிறது. விழாவில், மே 5ம் தேதி காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ேஹாமம், தனபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.6ம் தேதி ராமேஸ்வரம் கோவிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம், காமாட்சி அம்மன் கோவிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வருகின்றனர். மாலை, 4:30 மணிக்கு முதல்கால யாக பூஜை நடக்கிறது.வரும், 7ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜை; மாலையில் மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், காலை, 8:15 மணிக்கு மகா கும்பாபிேஷக விழாவும் நடக்கிறது. மாலையில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, முருகன் நற்பணி மன்றம் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.