பதிவு செய்த நாள்
01
மே
2022
01:05
பல்லடம்: பல்லடம் அருகே, பிரத்யங்கிரா தேவி கோவிலில், சித்திரை மாத அமாவாசை வழிபாடு நடந்தது.
பல்லடம் அடுத்த வெங்கிட்டாபுரத்தில், அதர்வண பத்ரகாளி கோவில் உள்ளது. இங்கு, 16 அடி உயரத்தில் ஸ்ரீபிரத்யங்கிரா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். மாதந்தோறும் அமாவாசை வழிபாடு இங்கு சிறப்பாக நடந்து வருகிறது. சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, கடன் பிரச்னை, பித்ரு சாபம், கண் திருஷ்டி, வியாதிகள், செய்வினை கோளாறுகள் உள்ளிட்ட வற்றை நீக்கும் நிகும்பலா யாகம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று, ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது. முன்னதாக, விநாயகர், முருகன், சிவன், ஆஞ்சநேயர், சனீஸ்வரர், மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, தங்க காப்பு அலங்காரத்துடன் சிம்ம வாகனத்தில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.