மற்றவர் நம்மை மதிக்க வேண்டும் என்றால் செல்வந்தனாக அல்லது செல்வாக்கு உடையவராக இருக்க வேண்டும். இந்த இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் வெவ்வேறானவை. செல்வம் என்றால் பணம். மற்றவர்களால் நீங்கள் எவ்வாறு மதிக்கப்படுகிறீர்கள் என்பதே செல்வாக்கு. செல்வம் வந்தால் செல்வாக்கு வரும் என்பது ஒருவகை. சொல்வாக்கு இருந்தால் செல்வாக்கு வரும் என்பது மற்றொரு வகை. சரி. சொல்வாக்கு என்றால் என்ன? கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். மற்றவர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வீர்கள்.