பதிவு செய்த நாள்
06
மே
2022
11:05
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று சிறப்பு யாக பூஜை நடந்தது.
வால்பாறை நகரில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, வரும் 8ம் தேதி நடக்கிறது.இதையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று, ராமேஸ்வரம், சபரிமலை உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை, காமாட்சி அம்மன் கோவிலிருந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வருகின்றனர்.வரும் 8ம் தேதி காலை, 8:15 மகா கும்பாபிஷேக விழாவும், மாலை, 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கவுள்ளன.விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.