இந்திரனின் தாய் அதிதி, இந்திரலோகத்திலிருந்து தினமும் பூலோகத்திலுள்ள இளங்கோவிலுக்கு வந்து சிவபூஜை செய்து வந்தாள். தன் தாயின் சிரமத்தைப் போக்க, இந்திரலோகத்திலேயே இளங்கோவிலை ஸ்தாபிக்க எண்ணிய இந்திரன், அந்தக் கோவிலை அப்படியே பெயர்த்தெடுக்க முயன்றான். எந்த வேலையையும் விநாயகரை வழிபட்டால் தான் தடையின்றி செயல் முற்றுப்பெறும். ஆனால், இந்திரன் விநாயக பூஜை செய்யவில்லை. இதனால், விநாயகப் பெருமான் கோவிலை இங்கிருந்து கொண்டு செல்ல அனுமதி தரவில்லை. தன் தவறை உணர்ந்த இந்திரன், இதற்கு பரிகாரமாக கோடிலிங்கங்கள் அடங்கிய ஸ்ரீ ருத்ர கோடீஸ்வரர் என்ற சிவலிங்கத்தை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தான். பிறகு தன் தாய்க்கு பதிலாக அவனே தினமும் வந்து பூஜை செய்தான்.கடலுõர் மாவட்டம், காட்டு மன்னார்குடியில் இருந்து ஆறு கி.மீ., துõரத்திலுள்ள மேலக்கடம்பூரில் இக்கோவில் உள்ளது.