ஒருமுறை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் ஒரு இளைஞர், மந்திரங்களுக்கு, வலிமை உண்டா என்றார். சுவாமிகள், பாடப்புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள பாடங்களைப் படிப்பதால் என்ன பயன்? என்று கேட்டார். இளைஞரோ, படித்தால் தேர்ச்சி பெறலாம்; வேலைக்குப் போகலாம்; சம்பாதிக்கலாம் என்று விடையளித்தார். உடனே வாரியார், பாடப்புத்தகங்களை படித்தால் தேர்ச்சி பெற்று, வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம். என்றால், மிகப் பெரிய மகான்களால் எழுதப்பட்ட, சொல்லப்பட்ட மந்திரங்களுக்கு வலிமை இருக்காதா? அவை, ஆன்மாவை பலப்படுத்த, வளப்படுத்த, மேம்படுத்த சொல்லப்பட்டவை. அவற்றின் சக்தியும், வலிமையும் சொல்லில் அடங்காதவை! என்றார்.