கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கோபுரத்தின் சிறப்பைச் சொல்வர். தொலைவில் நின்றுகோபுரத்தை வணங்கினால் கூட,கோயிலுக்குச் சென்ற புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம். எவ்வளவு தொலைவில் ராஜ கோபுரம் தெரிகிறதோ அந்த இடத்தில் இருந்து கோயில் வரையுள்ள பகுதிபூலோக கைலாயம் என்று பெயர் பெறும். கருவறையில் அருள்புரியும் மூலவர் கோபுரத்திலும் வீற்றிருப்பதாக ஐதீகம். இதனால், ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து, தலை மேல் இரு கைகளையும் குவித்து வணங்க வேண்டும். இதன் நோக்கம், எல்லாம் நீயே! என்று ஆண்டவனைச் சரணடைவதாகும்.