வால்பாறை: வால்பாறை, முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலின், 35ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும் நடந்தது. காலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜை நடந்தது.விழாவில், நாளை, 12ம் தேதி திருக்கல்யாணமும், 14ம்தேதி மாலை பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 15ம் தேதி வரை நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.