பதிவு செய்த நாள்
11
மே
2022
12:05
சூலுார்: ரங்கநாதபுரம் கே.என்.கே., நகர் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் அக்னி கம்பம் நடப்பட்டது. கண்ணம்பாளையம் பேரூராட்சி, ரங்கநாதபுரம் கே.என்.கே., நகரில், முத்துமாரியம்மன் கோவில், திருக்கல்யாண உற்சவ திருவிழா, கடந்த 3ம் தேதி பண்டிகை சாட்டுதலுடன் துவங்கியது.கடந்த, 7ம் தேதி கம்பம் நடப்பட்டது. நேற்று முன் தினம் காலை விநாயகர் பொங்கல் வைக்கப்பட்டது. இரவு கம்பத்தில் பூவோடு வைத்து பூஜை நடந்தது.நேற்று அம்மை அழைத்தலும், அலங்கார பூஜையும் நடந்தன.
இன்று அதிகாலை திருக்கல்யாணமும், மாவிளக்கு மற்றும் பொங்கல் பூஜையும் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது.* சூலுார் மார்க்கெட் ரோட்டில் உள்ள அத்தனுார் அம்மன் கோவில், பல நுாற்றாண்டுகள் பழமையானது. இங்கு, 29ம் ஆண்டு வைகாசி திருக்கல்யாண திருவிழா, கடந்த மே 3ம் தேதி, சாமி சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கின்றன. நேற்று அக்னி கம்பம் நடும் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கம்பம் சுற்றி ஆடி வழிபட்டனர்.தொடர்ந்து, பண்டார வேஷம், அம்மை அழைத்தல், தீர்த்தம், பால் குட ஊர்வலம், மாவிளக்கு, திருக்கல்யாணம், மகா முனி மற்றும் சங்கிலி கருப்பராயனுக்கு படையல் பூஜை உள்ளிட்டவை நடக்கவுள்ளன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.