சத்தியமங்கலம் அருகே உள்ள தாண்டாம் பாளையம் கரிய காளிம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது. கடந்த ஏப் 27ல் கரியகாளியம்மன் கோவில்,மாகாளியம்மன் கோவில்,கருமாரியம்மன் கோவில்,முத்து மாரியம்மன் கோவில் பூச்சாட்டப்பட்டது.மே 4ல் கருமாரியம்மன்,முத்துமாரியம்மன் கோவிலில் கம்பம்நடப்பட்டது. மே 10ல் படைக்கலம் எடுத்து வந்தனர். அதைதொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகபூஜை நடந்தது.மே11ல் அரண்மனை பொங்கல் வைக்கப்பட்டது.இன்று காலை 5.30க்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து 6.30க்கு தலைமை பூசாரி சண்முகம் முதலில் குண்டம் இறங்கினார்.அதை தொடர்ந்து குழந்தைகள்,பொதுமக்கள் குண்டம் இறங்கினார்கள். காலை 8மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.காலை 10மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது.இரவு 8 மணிக்கு கம்பம்பிடுங்கப்பட்டது.வெள்ளிகிழமை முத்து ரதத்தில் அம்மன் ஊர்வலம் வருகிறது. சனிக்கிழமை மஞ்சள் நீராடுதல் நடைபெறுகிறது.திருவிழாவையொட்டி தாண்டாம்பாளையம், கெஞ்சனுார்,மூலக்கடை,உப்புபள்ளம்,கொழிஞ்சானுார்,உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.