பந்திக்கு முந்து; படைக்கு பிந்து’ என்பதை சாப்பாட்டு பிரியர்கள் உருவாக்கிய பழமொழி என்பார் சிலர். ஆனால் அதன் ஆன்மிக அடிப்படையை புரிந்து கொண்டால் இப்படி சொல்ல வாய்ப்பில்லை. சுப விசேஷங்களில் அனைவரும் சேர்ந்து உண்பதை ‘பந்தி’ என்பர். ‘வடமொழியில் உள்ள ‘பங்க்தி’ என்ற சொல்லே தமிழில் ‘பந்தி’ என்றானது. மனத்துாய்மை மிக்க ஒருவர் பந்தியில் சாப்பிட்டால் கூட, அங்கு பரிமாறும் உணவு முழுவதும் புனிதமாகி விடும். அப்படிப்பட்ட நல்லவரை ‘பங்க்தி பாவனர்’ என்று குறிப்பிடுவர். பந்தியில் சேர்ந்து சாப்பிடும் ஒருவர் நல்லவராக இருந்தாலும், அந்த நன்மை அனைவருக்கும் கிடைக்கும் எனில் பந்திக்கு முந்துவது சரி தானே!