மனிதன் அடிக்கடி குழப்பத்திற்கு ஆளாகிறான். மனம் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. குழப்பம் போக்கி மனிதனை நல்வழிப்படுத்த ஆதிசங்கரர் எழுதிய நுால் ‘மோக முத்கரம்’. இதற்கு ‘ஆசையை உடைக்கும் சம்மட்டி’ என்பது பொருள். இந்நுாலுக்கு ‘பஜகோவிந்தம்’ என்றும் மற்றொரு பெயருண்டு. இதைப் படித்தால் பிறவி என்னும் பெருங்கடலை, சிறு ஓடையைப் போல தாண்டலாம். இப்பாடலில் ‘பஜ கோவிந்தம்’ என்னும் சொல் மூன்று முறை இடம் பெற்றுள்ளது. ஏதேனும் ஒன்றை உறுதிபட சொல்ல விரும்பினால், அருளாளர்கள் மூன்று முறை சொல்வர். கோவிந்தா என்னும் திருநாமத்தை சொன்னால் மனம் துாய்மை பெறும் என்கிறார் ஆதிசங்கரர்.