புதுச்சேரி: ஆவணி அவிட்ட விழா கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா கோவிலில் நாளை (1ம் தேதி) நடக்கிறது. கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் நாளை (1ம் தேதி) ஆவணி அவிட்ட விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணி முதல் 12 மணி வரை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஹோமத்துடன் பூணூல் மாற்றிக் கொள்ள வேத சாம்ராட் பிரம்மஸ்ரீ ராஜா சாஸ்திரிகள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நன்மை வேண்டி வரும் 2ம் தேதி காலை 5.30 மணி முதல் 7 மணி வரை வேதபுரி சனாதன தர்ம பரிபாலன சபா சார்பில் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் சமஷ்டி காயத்ரி மந்திரம் மற்றும் ஹோமம் வழக்கம் போல் நடைபெறும். விழாவில் அனைவரும் கலந்து கொண்டு காயத்ரி மாதா அருள் பெறலாம். மேலும் விபரங்களுக்கு வேத சாம்ராட் பிரம்மஸ்ரீ ராஜா சாஸ்திரிகள் 98423 29770, 98423 27791 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.