புதுச்சேரி: வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள பாண்டுரங்கன் சன்னதியில் உலக நன்மை வேண்டி வேங்கடாஜலபதி பஜனைக்கூடம் சார்பில் 24 மணி நேர அகண்ட பஜனை நேற்று முன்தினம் காலை 6 மணிக்குத் துவங்கியது. தொழிலதிபர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். ஆடிட்டர் கணேசன், சீனிவாசன், மனோன் மணி ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஜனைக் கூடம் சார்பில் கடந்த 25ம் தேதி முதல் பாண்டுரங்கனுக்கு உடுப்பி கிருஷ்ணன், பரமபதவாசன், குருவாயூரப்பன், கோதண்டராமன் ஆகிய அலங்காரங்கள் செய்யப்பட்டது. நேற்று நடந்த அகண்ட பஜனையில், பாண்டுரங்கன் ராஜ உடை தரித்து அருள் பாலித்தார். நேற்று முன்தினம் காலை 6 மணிக்குத் துவங்கிய பஜனை, நேற்று (30ம் தேதி) காலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலையில் பஜனையில் பாண்டுரங்க லீலை நாடகம் நடைபெற்றது. பஜனையை வேங்கடாஜலபதி பஜனைக்கூடம், பாண்டுரங்க பஜனை மண்டலி, விட்டோபா பஜனை மண்டலியினர் உள்ளிட்டவர்கள் நடத்தினர்.