திருநெல்வேலி: யஜூர் வேத ஆவணிஅவிட்டம் (1ம் தேதி) நடக்கிறது. கொட்டாரம் கிராமத்தில் நாளை காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும், பாளை., கே.டி.சி.நகர் இஸ்மாயில் நகர் பிளாட் நம்பர் 13ல் டி.வி.கிருஷ்ணமூர்த்தி இல்லத்தில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், திம்மராஜபுரத்தில் காலை 9.45 மணி முதல் 11 மணி வரையிலும், பாளை., ராமசாமி கோயிலில் பகல் 11.30 மணி முதல் ஒரு மணி வரையிலும் ஆவணி அவிட்டம் நடக்கிறது. ஆவணிஅவிட்டத்தை கொட்டாரம் ராமசாமி வாத்தியார் நடத்தி வைக்கிறார். நெல்லை டவுன் பெருமாள் தெற்கு ரதவீதி ஆஞ்சநேயர் கோயிலில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், தாழையூத்து விநாயகர் கோயிலில் காலை 9.30 மணிக்கும் ஆவணி அவிட்டத்தை அடைச்சாணி சீனிவாச வாத்தியார் நடத்தி வைக்கிறார். நெல்லை ஜங்ஷன் தாமிரபரணி கரை சிருங்கேரி சங்கர மடம் மடத்தில் காலை 9 மணிக்கு ஆவணி அவிட்டத்தை ராமசாமி வாத்தியார் நடத்திவைக்கிறார். 2ம் தேதி காலை 9 மணி முதல் 11.30 மணி வரை கொட்டாரம் கிராமத்தில் ரிக் வேத ஆவணி அவிட்டம் நடக்கிறது.