ஐதராபாத் : தெலுங்கானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி விஜயேந்திரர், வர்கலில் உள்ள சரஸ்வதி கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தெலுங்கானா மாநில யாத்திரை மேற்கொண்டுள்ளார். தலைநகர் ஐதராபாதின் புறநகர் பகுதியான ஸ்கந்தகிரி அருகே வர்கலில், காஞ்சி மடம் சார்பில் சரஸ்வதி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் முருகன், திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.கோயில் சார்பில் வேத பாடசாலை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பாடசாலையில் இதுவரை 175க்கும் அதிகமானோர் வேதம் படித்துள்ளனர்.
தெலுங்கானா யாத்திரை மேற்கொண்டுள்ள விஜயேந்திரர், வர்கலில் உள்ள சரஸ்வதி கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். அவர் அருளாசி வழங்கி பேசுகையில், சரஸ்வதி தேவி குடியிருக்கும் தலமாக வர்கல் உள்ளது. காஞ்சி மஹாபெரியவரின் அருளாசியால், இங்கு ஆன்மிக செயல்பாடுகள் சிறப்பாக நடக்கின்றன என்றார்.