பதிவு செய்த நாள்
19
மே
2022
04:05
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே காளிபாளையம் கிராமத்தில் காமாட்சி அம்மன் பூச்சாட்டு, பொங்கல் விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பூச்சாட்டு, பொங்கல் விழா நடந்தது. முதல் நாள் முத்துக்குமாரசாமியிடம் பூ கேட்டல் மற்றும் மகா கணபதி பூஜை நடந்தது. தொடர்ந்து, பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் விழாவில் படைக்கலம், பால்குடம் மற்றும் மஞ்சள் நீர் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு அம்மன் அழைத்தல், நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மூன்றாம் நாள் காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, அதை தொடர்ந்து அன்னதானம் மதியம், 3:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, கம்பம் கங்கையில் சேர்த்தல், படைக்கலம் கொண்டு சேர்த்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காளிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.