Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னத்தூர் பொன் காளியம்மன் ... பழங்குடியினர் கோவில் அகற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை அருகே மதுரை அழகர் கோவிலுக்கு திரு அனல் ஆட்டம் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மே
2022
05:05

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள வேலூர் கிராமத் திடல் பகுதியில் மதுரை அழகர்கோவிலில் அக்காலத்தில் திரு அனல் ஆட்டம் ஆடியது பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேலூர் திடல் பகுதியில் எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டு ஒன்று இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த மலையாண்டி என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சிசுந்தரம்,தாமரைக் கண்ணன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.இதுபற்றி அவர்கள் கூறுகையில், வேலூரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு மூன்றடி உயரமும் ஒன்றேகால் அடி அகலமும் உள்ளது.அக்கல்லில் அழகர் திரு அனல் ஆட்டம் வளூர் என்று 4 வரி மட்டும் எழுதப்பட்டுள்ளது. 4 புறமும் சக்கரம் கோட்டோவியமாக இடம்பெற்றுள்ளது. தற்போது வேலூர் என அழைக்கப்படும் இவ்வூர் முன்பு வளூர் என அழைக்கப்பட்டு வந்திருக்கலாம் என தெரிகிறது. மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலத்தில் சைவ மதத்திற்கும் வைனவ மதத்திற்கும் இருந்த பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக இரு மதங்களும் ஒற்றுமையாக கொண்டாட உருவாக்கப்பட்ட திருவிழா தான் சித்திரை திருவிழா.இந்த சித்திரை திருவிழா நிகழ்வாக சொக்கர்-மீனாட்சி திருக்கல்யாணம்,அழகர் ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வின்போது சைவ வைணவ இணைப்பு திருவிழாவாக திருமலை நாயக்கர் நடைமுறைப்படுத்தி திருவிழா 12 நாட்கள் வரை நடைபெறும் விதமாக ஆணையிட்டு விழாவினை நடத்தி வந்துள்ளார்.அப்போது திருவிழாவிற்கு திரி எடுத்தல் அதாவது திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் மற்ற தென்மாவட்டங்களில் இருந்தும் இந்த திரு அனல் ஆட்டம் என்று சொல்லக்கூடிய திரி எடுத்து ஆடி சித்திரை திருவிழாவிற்கு வருவதும் வழக்கமாக இருந்துள்ளதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கும் இதனை காளி என வழிபட்டு வருவதாக கூறினர். கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar