பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே செம்பன் வயல் பழங்குடியினர் காவல் தெய்வம் கோவிலை எஸ்டேட் நிர்வாகம் அகற்றியது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
பந்தலூர் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது செம்பன் வயல் பழங்குடியின கிராமம் அமைத்துள்ளது. பனியர் சமுதாயத்தை சேர்ந்த 15 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் காவல் தெய்வமான குளியன் கோவில், கிராமத்திற்கு அருகே உள்ள பாரி ஆக்ரோ எஸ்டேட் பகுதியில் இருந்தது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஒரு நாள் பூஜை நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பூஜைகள் நடத்தப்படாத நிலையில், நேற்று முன்தினம் பூஜை நடந்தது. புதராக இருந்த பகுதியை சுத்தம் செய்து பூஜை செய்துள்ளனர். இதற்கான அனுமதியை எஸ்டேட் நிர்வாகத்திடம் பெறாத நிலையில், நேற்று அப்பகுதிக்கு சென்று தெய்வங்களின் கற்சிலைகளை அகற்றி, சன்படுத்தி, தேயிலை நாற்றுகளை நடவு செய்தனர். பழங்குடியினர் பழமைவாய்ந்த கோவிலுக்கு, எஸ்டேட் நிர்வாகம் சொந்தம் கொண்டாடி கோவிலை அகற்றியது சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. இது குறித்து பாரி ஆக்ரோ பொது மேலாளர் முரளி படிக்கல் கூறுகையில், எஸ்டேட்டிற்கு சொந்தமான தேயிலை செடிகளுக்கு மத்தியில், பழங்குடியின மக்கள் ஆக்கிரமித்து பூஜை செய்தனர். இதனால் நாங்கள் எங்கள் இடத்தை கையகப்படுத்தி சீரமைத்துள்ளோம். மாறாக கோவிலை அகற்றியதாக கூறுவது தவறு என்றார்.