தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2022 10:05
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன குரு பூஜை விழாவை முன்னிட்டு, குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வரும் பிரசித்திபெற்ற பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி துவங்கியது.
மயிலாடுதுறை தர்மபுரத்தில் 16ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது. மடத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா 11 நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலாவும், திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 10ம் நாளான குருபூஜையை முன்னிட்டு நேற்று காலை தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மடத்தில் இருந்து நாற்காலி (சவாரி ) பல்லக்கில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க, தேவாரம் இசைக்க மேல குரு மூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 11ஆம் திருநாளான இன்று 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பல்லக்கில் அமர்ந்து வீதி உலா வரும் பிரசித்திபெற்ற பட்டினப்பிரவேசம், நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நிகழ்ச்சிகள் நமது இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. விழாவை https://www.dinamalar.com/video_main.asp?news_id=3311&cat=live லிங்கை கிளிக் செய்து காணலாம்.