மாரியம்மன் கோயிலில் 6 அடி உயர பத்தி கொளுத்தி மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2022 08:05
வேடசந்தூர்: வேடசந்தூர் மாரியம்மன் கோவிலில், வருடாந்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தனியார் ஊதுபத்தி நிறுவனம் சார்பில், 6 அடி உயரமுள்ள, 24 மணி நேரம் வாசனைப் புகையை வெளியிடக் கூடிய (எரியக்கூடிய) மெகா சைஸ் ஊதுபத்தியை தயாரித்து கொண்டு வந்தனர். இதை வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார், பொதுச் செயலாளர் ராஜா ஆகியோர் ஏற்றி வணங்கினர். பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.