காரைக்கால்: காரைக்கால் மேலகாசாகுடி மல்லிகேஸ்வரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் நெடுங்காடு மேலகாசாகுடி கிராமத்தில் மல்லிகேஸ்வரி மாரியம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் கடந்த 9ம் தேதி மாரியம்மன் மற்றும் 10ம் தேதி பத்ரகாளியம்மனுக்கு பூச்சொறிதல்,காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம் கஞ்சிவார்த்தல்,சந்தனகாப்பு அலங்காரத்தில்,மாரியம்மன் முக்கிய பகுதிகளில் வீதியுலா நடந்தது.பின்னர் மல்லிகேஸ்வரி மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் தீமிதி திருவிழா மிகவிமர்ச்சியாக நடைபெற்றது.நேற்று மஞ்சள் விளையாட்டு விழா நடந்தது.இந்நிகழ்ச்சியில் கிராமவாசிகள்,நடுத்தர தொழிலாளர்கள் சங்கம்,அனைத்து நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.