மாவூற்று வேலப்பர் கோயில் சுனைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2026 10:11
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மாவூற்று வேலப்பர் கோயில் உள்ளது. மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.
இந்த கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை முதல்நாள் திருவிழா விமர்சையாக நடைபெறும். இது தவிர மாதந்தோறும் கார்த்திகை, அமாவாசை, பவுர்ணமி, விடுமுறை நாட்களில் அதிக பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இங்குள்ள சுனையில் நீராடி வேலப்பர், கருப்ப சுவாமிகளை வழிபட்டால் தீராத வினைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சியால் சுனையில் நீர் வரத்து குறைந்து பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மலைப்பகுதியில் கடந்த வாரங்களில் பெய்த மழையால் சுனையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியாக நீராடுகின்றனர்.