Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சலவை தொழிலாளி கனவில் தோன்றிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்தால் போதும்... பூமிக்கடியில் உள்ள மற்றொரு முருகனுக்கும் தானாகவே அபிஷேகம் நடக்கும் வியக்க வைக்கும் தலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்தால் போதும்... பூமிக்கடியில் உள்ள மற்றொரு முருகனுக்கும் தானாகவே அபிஷேகம் நடக்கும் வியக்க வைக்கும் தலம்!

பதிவு செய்த நாள்

03 நவ
2026
10:11

படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி தண்டாயுதபாணி கோவிலில் தரிசிக்கலாம். இந்தக் கோவில் இரண்டு அடுக்கு உடையது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னன், முருகன் கோயில் கட்ட வேண்டுமென விரும்பினார். ஒருசமயம் அவர் வேட்டைக்காக இப்பகுதிக்கு வந்தார். இங்கிருந்த சுனையில் நீர் பருகியவர், சற்று நேரம் ஓய்வெடுத்தார். மன்னன், கனவில் தோன்றிய முருகன் தீர்த்தத்திற்கு அருகிலேயே கோயில் எழுப்பும்படி கூறினார். அதன்படி, மன்னர் இங்கு கோயில் எழுப்பினார். காலப்போக்கில் மூலவர் சிலை பின்னமாகியது. கோயிலும் சேதமடைந்ததால், முருகன் கோயில் ஒரு குடிசையின் கீழ் இருந்தது. முறையான பூஜைகளும் நின்று போனது. 1979ல் இங்கு வந்த கிருபானந்த வாரியார், கோயிலை மீண்டும் புனரமைக்கும் பணியைத் துவக்கினார். மூலவர் சிலை பின்னமாகியிருந்ததால் வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால், பழைய சிலையை எவ்வளவு முயன்றும் அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி, அதற்கு மேலே புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது. மூலஸ்தானத்தில் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தரும் இந்த முருகனை வழிபட வேண்டுதல் யாவும் நிறைவேறும். பொறுப்பான பதவி கிடைக்கும், தலைமைப்பண்பு வளரும்.


ராஜ தரிசனம்: மூலஸ்தானத்தில் முருகன், பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்தபடி நளினமாகக் காட்சி தருகிறார். இவருக்கு எப்போதும் கிரீடம் வைத்து, ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள். இந்த கோலத்தில் முருகனை தரிசித்தால், தலைமைப் பொறுப்புள்ள பதவி கிடைக்கும் என்கிறார்கள். உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், "மலைக்கேணி (கேணி - கிணறு) என்று பெயர் பெற்றது.


கீழ் பழநி: குன்றில் அமைந்திருக்கும் மலைக்கோயில்களில், சுவாமியைத் தரிசிக்க படியேறித்தான் செல்ல வேண்டும். ஆனால், இக்கோயில் படி இறங்கிச் சென்று தரிசனம் செய்யும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இக்கோயிலை, "கீழ் பழநி என்றும் அழைக்கிறார்கள். கந்த சஷ்டி விழா 7 நாட்கள் நடக்கும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


இத்தலம் பற்றிய மேலும் தகவலுக்கு: https://temple.dinamalar.com/new.php?id=1013 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னூர்: திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.மொண்டிபாளையம் அருகே ... மேலும்
 
temple news
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி: தமிழகத்தில் ஆதிசங்கரரின் தத்துவக் கருத்துகளும், பிரம்மசூத்திர பாஷ்யமும் பரவலாகப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar