செந்துறை பந்திபொம்மிநாயக்கனூர் காளியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2022 08:05
செந்துறை: செந்துறை அருகே உள்ள பந்திபொம்மிநாயக்கனூர் சாத்தாவுராயன் சாமி ,காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
திருவிழாவில் முன்னதாக மே17 கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தோரணம் கட்டுதல், பழக்கூடை எடுத்து வருதல், சக்தி அழைப்பு மாவிளக்கு, அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று மே 24 பக்தர்கள் பால்குடம், அக்னிச் சட்டி, பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல், பாரிவேட்டை, படுகளம் ஆடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். திருவிழாவின் நிறைவாக இன்று மே 25 மஞ்சள் நீராட்டத்துடன் அம்மன் பூஞ்சோலை செல்லுதல் நிகழ்ச்சி நடைபெறும்.