பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த உற்சவ விழாவில் பெருமாள் கருட வாகனத்தில் அருள்பாலித்தார். இக் கோயிலில் வைகாசி விழாவையொட்டி மே 16 அதிகாலை பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இறங்கி, அன்று காலை 12:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து சேஷ, கருட, அனுமன் வாகனங்களை அருள்பாலித்த பெருமாள் மே 21 காலை 10:30 மணிக்கு கோயிலை அடைந்தார். இரவு கண்ணாடி சேவை நடந்தது. தொடர்ந்து மே 22 உற்சவ சாந்தி விழாவும், நேற்று முன்தினம் இரவு கந்தவடி உற்சவத்தையொட்டி, பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி வலம் வந்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபையினர் செய்திருந்தனர்.