கடலாடி,: கடலாடி பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் உற்ஸவம் நடந்தது. கடந்த மே 14 அன்று காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று காலை 8:00 மணியளவில் 251 பால்குடம் ஊர்வலத்தில் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.இரவில் சிறப்பு அலங்காரத்தில் பத்திரகாளியம்மனுக்கு பூத்தட்டு ஊர்வலம் நடந்தது. இன்று காலை 10:00 மணியளவில் விளையாட்டுப்போட்டிகளும், மாலை விளக்கு பூஜை, மாவிளக்கு ஊர்வலம், மின்னொளி சப்பரத்தில் மாரியம்மன் புஷ்ப அலங்காரம் நடக்க உள்ளது.