கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் வரும் 5ல் தெய்வத் திருமணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2012 11:08
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் வரும் 5ம் தேதி தெய்வ திருமண விழா வெகுசிறப்பாக நடக்கிறது.கருவூர் ஸ்ரீ மஹா அபிஷேக குழு 14 ம் ஆண்டு தெய்வ திருமண விழா, கடந்த 28 ம் தேதி முகூர்த்தகால் நடு தலுடன் தொடங்கியது. வரும் 4 ம் தேதி மாலை 4 மணிக்கு கணபதி வழிபாடு, ராஜகோபுரத்துக்கு மாலை சாத்துதல், 5 மணிக்கு ஸ்ரீ பெருமாள் கோவிலுக்கு பெண் வீட்டு சீர் தட்டு அழைத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும் 5 ம் தேதி காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்தி களுக்கு 108 குடம் பால் அபிஷேகம், 7.30 மணிக்கு மங்கள இசை, 10.30 மணிக்கு தெய்வ திருமணம், மதியம் 12 மணிக்கு பசுபதி பாமாலை இசைதட்டு, 12.30 மணிக்கு தேவரா இன்னிசை, மதியம் 2 மணிக்கு ரு த்ர நடனாலய கலைஞர்களின் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தெய்வ திருமண விழாவையொட்டி கரூர் ராணி சீதை ஆச்சி திருமண மண்டப்பத்தில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது.