காளையார்கோவில்: மரக்காத்தூர் முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவ விழா கடந்த ஜூலை 24ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது.தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.நேற்று முன்தினம் 108 விளக்கு பூஜை,மழைவேண்டி கூழ்காய்ச்சி ஊற்றுதல், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.* சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலில் ஆடி செவ்வாயை யொட்டி 1008 திருவிளக்குபூஜை நடந்தது. கண்காணிப்பாளர் பழனிக்குமார் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., அருணகிரி துவக்கி வைத்தார். சின்னையா சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் தீப வழிபாடு செய்தனர்.