தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2012 11:08
வடமதுரை:வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடக்கும். ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடிக்க திண்டுக்கல் ரோடு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், ஒட்டன்சத்திரம் ரோடு வழியே தேர் நகரை வலம் வரும். ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பில் காலை 11 மணி முதல் அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பொதுமக்கள் செய்துவருகின்றனர்.தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவள்ளி தாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பூஜையின் இறுதியில் திருமாங்கல்ய கயிறு வழங்கப்பட்டது. இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.