திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் பிரமோற்சவ விழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2022 06:05
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பவான் கோவில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காரைக்கால் மாவட்ட திருநள்ளாரில் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஹேவிளம்பி வருஷம் பிரமோற்சவ விழா இன்று கோடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமத்துடன் துவக்கியது. இன்று தர்பாரண்யேஸ்வரர்,அம்பாள் மற்றும் சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து காலை ரிஷப கொடியேற்றமும்,பஞ்சமுர்த்தி வீதி உலா நடந்தது.வரும் 2ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு நடக்கிறது. 3ம் தேதி செண்பகதியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருதளும் 7ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்கரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலாவும்,விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா வரும் 9ம் தேதி நடக்கிறது.10ம் தேதி சனிஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் சுவாமி விதி உலா நடக்கிறது. 11ம் தேதி தெப்ப உற்சவமும், 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா வசாக தீர்த்தம் நடைபெற்றது.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.