சாயல்குடி: எஸ்.கீரந்தை கிராமத்தில் உள்ள பூங்குழலி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக யாகசாலை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் நான்கு கால பூஜை பூர்ணாஹூதி, கோ பூஜை தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இசையுடன் கடம் புறப்பாடு சென்று மூலஸ்தான விமானம் கோபுரங்களின் கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடத்தினர். மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நிறை வேற்றபட்ட பின்பு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.