ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம், மாடக்கோட்டை முனீஸ்வரர் கோவில் வைகாசி உற்ஸவ விழா, மற்றும் பூக்குழி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
விழாவின் தொடர்ச்சியாக மே 26ல், சாத்தமங்கலம் கிராமத்திலிருந்து பூத்தட்டு எடுத்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு, பக்தர்கள் ஊர்வலமாக சென்று மூலவருக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ச்சியாக நேற்று சாத்தமங்கலம் விநாயகர் கோவிலில் இருந்து, காவடி, பறவைகாவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கோவில் முன்பு தீமிதித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இயந்திர உதவியுடன் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்து பக்தர்களை பரவசப்படுத்தினர். மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.