பதிவு செய்த நாள்
28
மே
2022
04:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் காலை, ஹம்ஸ வாகன உற்சவம் நடந்தது.
மூன்றாம் நாள் உற்சவமாக, இன்று காலை கருட சேவை உற்சவம் நடைபெறுகிறது. பெருமாளின், 108 திவ்ய தேசங்களில், 57வது திவ்ய தேசமாக, காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் திகழ்கிறது. பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படும் இக்கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, ராஜ வீதிகளில் உலா வருகிறார். அதன்படி, இரண்டாம் நாள் உற்சவமான நேற்று காலை 6:30 மணிக்கு ஹம்ஸ வாகனத்திலும், மாலை 6:30 மணிக்கு சூரிய பிரபையிலும் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
மூன்றாம் நாள் உற்சவமாக, இன்று காலை 6:30 மணிக்கு, கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறுகிது. மாலை, 6:30 மணிக்கு, ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, பெருமாள் உலா வருகிறார். தேரோட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது.உற்சவத்திற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பட்டாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.