கப்பல் ஒன்று புறப்பட தயாரானது. உறவினர் யாரும் இல்லாத நிலையில் பயணம் செய்ய வந்த வியாபாரி ஒருவர் தன்னுடன் சிறுவன் ஒருவனை அழைத்து வந்திருந்தார். அவனிடம் ஐநுாறு ரூபாயைக் கொடுத்து, ‘‘ என் உறவினரைப் போல கையசைத்தபடி வழியனுப்பு’’ என்று சொல்லியிருந்தார். அப்போது பயணிகளில் சிலரும், வழியனுப்ப வந்தவர்களில் சிலரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர். இதே போல அந்த சிறுவனும் போலியான புன்னகையுடன் வியாபாரியை பார்த்து கையசைத்தான். இந்த வியாபாரி போலவே, பலரும் போலியான மனிதர்களை உறவினராக எண்ணி ஏமாறுகிறோம். ஆண்டவர் ஒருவரே உண்மையான உறவு என்பதை உணர்வதில்லை. வாழும் காலம் மட்டுமின்றி இறப்புக்குப் பின்னும் கூட அவர் நமக்கு துணையிருப்பார்.