ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம் பிராதுக்காரன்பட்டி மந்தையம்மன் மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரு நாட்கள் நடந்த விழாவில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், பூர்ணாகுதி நிகழ்ச்சிகள் நடந்தது. 2ம் நாள் காலை யாத்ரா தானம் | கடம் புறப்பாடாகி கோயிலின் கலசத்திற்கு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மந்தையம்மனுக்கு பால், பழம், நெய், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம், தீப ஆராதனைகள், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் பொதுமக்கள் செய்திருந்தனர்