பேய்க்குளம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கோலகலமாக நடந்தது. பேய்க்குளம் சங்கரநயினார்புரத்தில் உள்ள ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோயிலில் ஆடித்தபசுக்காட்சி திருவிழா நடந்தது. கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. நிறைவாக 11ம் நாள் அன்று காலை கணபதி ஹோமம் நடந்தது. காலையில் கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகள், அன்னதானம் நடந்தது. மாலையில் சுவாமி அம்பாளை அழைத்து வர புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பொதுமக்கள் சீர்வரிசையுடன் சுவாமி, அம்பாளுடன் சென்றனர். பின்னர் பேய்க்குளம் பஜாரில் அம்பாள் தபசு காட்சியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து வீதிஉலா நடந்தது. இதில் சுற்றுவட்டாற பொதுமக்கள், வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி அம்பாளை தரிசித்தனர். இரவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஆலய பக்தர்கள் சங்கம், தபசுவிழா கமிட்டியினர் செய்தனர்.