Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை எமதர்மர் கோவிலில் ... பரவை கோயில் களரி விழா  : பக்தர்கள் நேர்த்திக்கடன் பரவை கோயில் களரி விழா : பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை பக்தர்களை மகிழ்விக்கும் ‘மதுரவல்லி
எழுத்தின் அளவு:
மதுரை பக்தர்களை மகிழ்விக்கும் ‘மதுரவல்லி

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2022
09:06

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் யானை மதுரவல்லி 2016ல் உடல் நலக்குறைவால் இறந்த பின் வைக்கப்பட்ட பொம்மை யானை பக்தர்களை மகிழ்வித்து வருகிறது.

53 வயதான மதுரவல்லி 44 ஆண்டுகளாக ஆன்மிக சேவை செய்தது. சர்க்கரை நோய் பாதித்த நிலையில் கால்களில் புண் ஏற்பட்டது. அன்றைய வனஅலுவலர் நிஹார் ரஞ்சன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் சிகிச்சையளித்தும், பலனின்றி 2016ல் இறந்தது. கோயில் நந்தவனத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்களும், குழந்தைகளும் மதுரவல்லி பிரிவால் மனவருத்தம் அடைந்தனர்.  இந்நிலையில் மதுரவல்லி இறந்த சில ஆண்டுகளுக்குப் பின், கோயிலில் நடைபெற்ற நவராத்திரி கொலுவுக்காக பெரிய யானை பொம்மை வாங்கி பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த நிறுவனமும் அதனை கோயிலுக்கே வழங்கிவிட்டது. பக்தர்கள் கூறியதாவது: விசேஷ நிகழ்வுகளில் வைக்கப்படும் வழக்கமான யானை பொம்மை தான்.

ஆனால் அது பெருமாள் கோயிலுக்குள் இருப்பதால், அச்சு அசலாக எங்களின் பிரியமான மதுரவல்லி போலவே இருக்கிறது. ஆசையுடன் பெரியவர்களும், குழந்தைகளும் அதன் அருகே நின்று போட்டோ எடுத்து செல்கின்றனர். ஆண்யானை பொம்மை என்றாலும் மதுரவல்லி இல்லாத குறையை இந்த மாதிரிவல்லி தீர்த்து வருகிறது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar