நமது வாழ்க்கை ஆசை என்பதை மையமிட்டே ஓடுகிறது. இதுதான் நமது தவறுகளுக்கு காரணமாகவும் உள்ளது. எப்படி என்றால்.. ஒருவர் கீழே கிடக்கும் ரூபாய் நோட்டை எடுக்கிறார் என்பதை வைத்துக் கொள்வோம். அடுத்து அவர் என்ன செய்வார். மீண்டும் அதே மாதிரி கிடைக்குமா என வழிநெடுக தேடிக்கொண்டே போவார். இதுதான் மனதின் குணம். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நுாறு விஷயங்களை மனம் வளர்த்துக் கொள்ளும். அதாவது ‘வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடையும். இதனால் பிரச்னையும் வளரும். சரி.. இதற்கு தீர்வுதான் என்ன.. ஆசையை குறைப்பது. அதாவது ஆசை எந்தக்கட்டத்தில் நின்றுவிடுகிறதோ அந்தக் கட்டத்தில் அமைதியானது ஆரம்பமாகும். ஆண்டவரோடு இணைந்து வாழும் உங்களுக்கும் அமைதி கிடைக்கட்டும்.