சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தற்கால டிரஸ்டி மு.ராமசாமி பூஜாரி அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் கோவில் என்ற பெயரில் தவறுதலாக பட்டா பதிவு செய்யப்பட்டிருந்தது. இருக்கன்குடி செயல் அலுவலர் கருணாகரன், தவறுதலாக பட்டாவில் இடம் பெற்றுள்ள தற்கால டிரஸ்டி மு.ராமசாமி பூஜாரிபெயர் நீக்கி, அருள்மிகு மாரியம்மன் கோவில் இருக்கண்குடிஎன பட்டாவில் பெயர் மாற்றம் செய்யக்கோரி விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியனிடம் விண்ணப்பித்தார். மாவட்ட வருவாய் அலுவலரிடம் மு.ராம சமி பூஜாரி தரப்பில் பெயர் மாற்றம் செய்வதில் ஆட்சேபனை இல்லை என மனு வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன், மேலமடை கிராமத்துக்கு உட்பட்ட பட்டா எண் 559, 695, 703 , ல் (மொத்தம் 14. ஹெக்டேர் நிலம்) தற்கால டிரஸ்டி மு.ராமசாமி பூஜாரி , பெயரை நீக்கி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், இருக்கண்குடி என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கோவில் ஆணையாளர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.