பதிவு செய்த நாள்
07
ஜூன்
2022
06:06
மேட்டுப்பாளையம்: நடூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா, வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் நடூரில், மிகவும் பழமை வாய்ந்த, மகா மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் திருவிழா கடந்த மாதம், 29ம் தேதி காலை பூச்சாட்டுடன் துவங்கியது. அன்று இரவு கம்பம் நடப்பட்டது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பவானி ஆற்றில் இருந்து கோவிலுக்கு, அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். நேற்று காலை அம்மனுக்கு அலங்கார பூஜை செய்து செய்தனர். மாலை பெண் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு படைத்தனர். இன்று மாலை காளை மாடு பிடித்தலும், நாளை அம்மன் மறு ஊர்வலமும், 9ம் தேதி மஞ்சள் நீராட்டும், 10ம் தேதி மறுபூஜை, அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.