பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியில் ஸ்ரீ கோச்சடை முத்தையா சுவாமி, ஸ்ரீ பொன்னழகு கோயில் திருவிழா ஜூன் 3 ல் துவங்கி 5 வரை நடந்தது. மூன்று நாட்கள் நடந்த திருவிழாவில் பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல், கயிறு குத்துதல் சேத்தாண்டி வேஷம் எடுத்தல், கரகம், பால்குடம் எடுத்து வழிபட்டனர். முத்தையாசுவாமி வீச்சு அரிவாள் கோலத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை சருத்துப்பட்டி, அல்லிநகரம், கைலாசபட்டி, கள்ளிப்பட்டி, பெரியகுளம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பூஜாரி கூட்டத்து பங்காளிகள் செய்திருந்தனர்.