குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைசாக விசாக விழா கடந்த ஜூன் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமியும் அம்பாளும் இரவில் திருவீதி வலம் வருகின்றனர். இன்று காலை 7:00 மணிக்கு சிவகாமி அம்பாள் பல்லக்கில் ஆதி திருத்தளிநாதர் கோயிலுக்கு புறப்பட்டார். பின்னர் சிவகாமி அம்பாள் தவத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து சோமஸ்கந்தர் ஆதி திருத்தளிநாதர் கோயிலுக்கு புறப்பாடாகி சிவகாமி அம்பாளை சமாதானப்படுத்தி திருத்தளிநாதர் கோயிலுக்கு ‛பெண் அழைப்பாக’ அழைத்து வந்தார். தொடர்ந்து வேலாயுத சுவாமி கோயிலிலிரு்து திருக்கலயாண சீரை சோழிய வெள்ளாளர் உறவின் முறையார் ஊர்வலமாக கொண்டு வந்தனர். வஸ்திரம் மாற்றிய பின் திருநாள் மண்டபத்தில் ஊஞ்சலில் சுவாமியும் அம்பாளும் எழுந்தருளினர். . திருக்கல்யாண வைபவத்திற்கு வந்த பெண்களுக்கு திருமாங்கல்ய நாண் , மஞ்சள்,குங்குமம், வளையல்கள் வழங்கப்பட்டது. சிவாச்சார்யர்கள் பாஸ்கர், ரமேஷ், கணேசர் ஆகியோர் யாகம் வளர்ந்து வேதமந்திரங்கள் ஒலிக்க மங்கள வாத்தியங்கள் முழுங்கியதும், தேவஸ்தான ஆதீனகர்த்தர் பொன்னம்பல அடிகள் முன்னிலையி்ல சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருப்பூட்டு நடந்தது. ஏற்பாட்டினை திருப்புத்துார் சோழிய வெள்ளாளர் உறவின்முறையார் செய்தனர். நாளை சிறுகூடல்பட்டி மு.பழ. வகையறா மண்டகப்படி சார்பில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறும்.