மாங்கொட்டை திருவிழா : மேலூருக்கு எழுந்தருளிய திருவாதவூர் திருமறைநாதர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2022 09:06
மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி மாத மாங்கொட்டை திருவிழா ஜூன் 3 கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று திருவாதவூரில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஷ்வரர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுடன் திருமறைநாதர் மேலுாருக்கு எழுந்தருளினார். பேஷ்கார் ஷாஜி தலைமையில் நடைபெற்ற விழாவில் வழி நெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து சுவாமியை வரவேற்றனர். மேலுார் நுழைவு வாயிலில் தாசில்தார் இளமுருகனுக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலுார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று(ஜூன் 8) அதிகாலை மீண்டும் மேலுாரில் இருந்து திருவாதவூருக்கு சுவாமி புறப்படுகிறார். ஜூன் 10 திருக்கல்யாணமும், ஜூன் 11 ல் தேரோட்டமும் நடைபெறுகிறது.