பதிவு செய்த நாள்
10
ஜூன்
2022
01:06
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் மகாகும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 4ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 5ம் தேதி யாகசாலை ,சிறப்பு ஹோமம் நடந்தது. 6 ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை, 7ம் தேதி 2ம் கால யாகசாலை பூஜை மற்றும் 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு 4வது யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு பரிவார சன்னதிகள் கும்பாபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு 4வது கால யாகசாலை பூஜை நடந்தது.தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு 5ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று 9ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு 6வது கால யாகசாலை பூஜை, 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும். பிரதான கலசம் ஆலய வலம் வந்து, 10:35 மணிக்கு மூலவர் ஸ்துாபி விமானம் மற்றும் அனைத்து கோபுரம் கும்பாபி ஷேகம் நடந்தது.
பின், 11:15 மணிக்கு அம்மன் மூலவர் மகா கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம், 9:00 மணிக்கு சுவாமி வீதி யுலா நடைபெறுகிறது. 10ம் தேதி முதல் 48 நாட்க மண்டலாபிஷேகம் நடக்கிறது.விழாவினை அர்த்தநாரி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். விழா ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்தனர். விழாவில் தர்கார் சிவப்பிரகாசம், கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.